கீழ் வான கோடியின்

கீழ்‌ வான கோடியின்‌
செம்‌ காந்தி சூரியன்‌
எழும்பிடும்‌;
அடியார்‌ ஆன்‌மத்தின்‌
நீதியிண் சூரியன்‌
ஆரோக்கியம்‌ சீருடன்‌
எழும்பிடும்‌.

2. ராவிருள்‌ நீங்கிற்றே
காந்தியும்‌ தோன்றிற்றே
பூமி தன்னில்‌;
பாவாந்தகாரமும்‌
எவ்வறிவீனமும்‌
நீங்கிடத்‌ தோன்றிடும்‌
எம்‌ நெஞ்சத்தில்‌.

3. வடிவம்‌ வர்ணமும்‌
வான்‌ புவி வண்ணமும்‌
காணுவோமே;
உம்‌ சிஷ்டி நோக்கத்தை
உம்‌ ஞான ஜோதியை
உந்தன்‌ நற்பாதையைக்‌
காட்டுவீரே.

4. ஜீவ இராசிகள்‌
நீர்‌ நில வாசிகள்‌
எழும்பவே;
மகிழ்ந்து மாந்தரும்‌
வணங்கிப்‌ போற்றியும்‌
செல்வோம்‌ எம்‌ வேலைக்கும்‌
எழும்பியே.

5. மன்னாவால்‌ போஷியும்‌
செல்‌ பாதை காட்டிடும்‌
இந்நாள்‌ எல்லாம்‌;
அன்றன்றும்‌ தருவீர்‌
ஆடை ஆகாரம்‌ நீர்‌;
மோட்சம்‌ நடத்துவீர்‌
ஆயுள்‌ எல்லாம்‌.

Start Downloading Your Apps