ஆதி மெய்தேவனே உம்

ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ
நீதியாம் ஜோதி அனாதி தேவனே - உம்
நீதிக்கோர் எல்லையுண்டோ - இயேசு

சரணங்கள்

1. எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்
பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி - நான்
தத்தம் செய்தேன் உமக்கே - ஆதி

2. எத்தன் எனக்காக - இன்னுயிர் கொடுத்தீரே
எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு
இதயம் ஈடாகுமோ?- ஆதி

3. ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்
தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்
என் துதிகள் தான் போதுமோ?- ஆதி

4. பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்
இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து - நான்
பட்சமாய் போற்றிடுவேன் - ஆதி

5. அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்
நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்
அன்பின் தொனி கேட்குதே- ஆதி

6. கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்
இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்
சத்தம் தொனித்திடுதே- ஆதி

7. எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா
பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்புதானோ- ஆதி

Start Downloading Your Apps